நடுவரிடம் அடம்பிடித்த ரோகித்; அபராதம் விதித்த ஐபிஎல்

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (16:45 IST)
நேற்று நடைப்பெற்ற புனே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்ஷா நடுவரிடம் தகராறு செய்ததால் அவருக்கு ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.


 

 
ஐபிஎல் 10வது சீசன் லீக் போட்டியில் நேற்று மும்பை மற்றும் புனே அணிகள் மோதின. இதில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியத்தில் தோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் கடைசி ஓவரில் நடுவர் வைட் பந்தை, வைட் என அறிவிக்காதது தான் காரணம் என மும்பை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
 
கடைசி ஓவரில் வீசப்பட்ட மூன்று பந்து ஆப் சைட்டில் சென்றதால், அதை வைட் என கணக்கிட்டு ரோகித் சர்மா அடிக்காமல் விட்டார். ஆனால் அதை நடுவர் வைட் என அறிவிக்கவில்லை. இதனால் ரோகித் அதை வைட் என அறிவிக்குமாறு நடுவரிடம் தகராறு செய்தார்.
 
இதற்கு ஐபிஎல் நிறுவனம் அவருக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்