சச்சின் விளையாடுவதை டிவியில் பார்த்து ஷாட்களைக் கற்றுக்கொண்டேன்… சேவாக் சொன்ன ரகசியம்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (08:08 IST)
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சேவாக் சச்சின் விளையாடுவதை பார்த்து சில ஷாட்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டையே டி 20 கிரிக்கெட் போல விளையாடி நாள் முழுவதும் ரசிகர்களை தொலைக்காட்சிக்கு முன்னர் உட்காரவைத்தவர் சேவாக். அந்த அளவுக்கு அதிரடிக்கு பெயர் போன சேவாக் இப்போது சச்சினிடம் கற்றுக்கொண்டது பற்றி பேசியுள்ளார். அதில் ‘1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது சச்சினின் ஸ்ட்ரைட் டிரைவ் மற்றும் பேக்புட் பன்ச் ஆகியவற்றைப் பார்த்துதான் அந்த ஷாட்களை எப்படி விளையாட வேண்டும் எனக் கற்றுக்கொண்டேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்