ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி: பிசிசிஐ துணை தலைவர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (22:24 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் 29 போட்டிகள் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் மீதி போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தது.
இந்த நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் மீதி போட்டிகள் நடைபெறும் என்று செய்திகள் கசிந்தன. இந்த நிலையில் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அவர்கள் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
இந்த அறிவிப்பில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும் இந்த போட்டிகள் செப்டம்பரில் 19ல் தொடங்கி அக்டோபர் 15 வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தகுந்த பாதுகாப்புடன் இந்த போட்டிகள் நடத்தப்படும் என்றும் வீரர்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்