டி20 உலகக் கோப்பை தொடர்: 5 விக்கெட் எடுத்து அசத்திய சிஎஸ்கே வீரர்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (19:22 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் சிஎஸ்கே வீரர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 112 ரன்கள் எடுத்துள்ளது 
 
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து 113 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்துள்ளது என்பது இன்னும் 35 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்