உலகக்கோப்பை செஸ்.. தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேற்றம்..!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (07:32 IST)
உலகக்கோப்பை செஸ் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் அரையிறுதி போட்டியில் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். 
 
இதனையடுத்து பிரக்ஞானந்தாவுக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஃபேபியானோ என்பவரை வீழ்த்தினார். இதனை அடுத்து அவர் உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் 
 
இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சன் என்பவரை எதிர்கொள்ள இருக்கிறார். இந்த போட்டியில் அவர் வென்று விட்டால் உலக கோப்பை சாம்பியன் பட்டம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்