முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதருக்கான விருது

வெள்ளி, 28 ஜூலை 2023 (21:18 IST)
சமீபத்தில்  44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை  தமிழ்நாடு அரசு நடத்தியது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  2023ஆம் ஆண்டிற்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதய நிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’’மாண்புமிகு  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டலில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கிற வகையில் கழக அரசு நடத்தியது. இதனை போற்றுகிற வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு  2023ஆம் ஆண்டிற்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதருக்கான விருதினை (Man of the Year Award) ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு.பரத் சிங் செளகான் உள்ளிட்டோர் இன்று வழங்கினார்கள். இந்த பெருமைமிகு நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக,  ’’ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கிப் போட்டிக்காக புனரமைக்கப்பட்டுள்ள Pavilion-ஐ இன்று ஆய்வு செய்தோம்.  இந்த சிறப்புக்குரிய Pavilion-ஐ மாண்புமிகு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை திறந்து வைக்கவுள்ளார்கள். இந்த நிகழ்வில் ஹாக்கி வீரர்களும் - ஆர்வலர்களும் திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சீரிய வழிகாட்டலில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கிற வகையில் கழக அரசு நடத்தியது. இதனை போற்றுகிற வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதருக்கான விருதினை (Man of… pic.twitter.com/1C1RK3ccZh

— Udhay (@Udhaystalin) July 28, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்