பாகிஸ்தான் வீரர் ஃபக்கார் ஸமான் 193 ரன்கள் விளாசல்… உலக சாதனைப் படைத்தும் தோல்வி!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:51 IST)
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 342 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பி எமாற்றினாலும் அந்த ஃபக்கார் ஸ்மான் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். அதிரடியாக விளையாடிய அவர் 193 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு வீரரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் ஷேன் வாட்ஸன் 185 ரன்கள் சேர்த்திருந்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 324 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்