இந்தியாவில் முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
திங்கள், 5 ஏப்ரல் 2021 (06:23 IST)
இந்தியாவில் முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
தமிழகம் உள்பட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகிலேயே ஒரு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்;
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,793 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 57,074 பேர்க்ளும் மும்பையில் 11,1623 பேர்க்ளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.