டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2வது பதக்கம்!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (17:49 IST)
டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2வது பதக்கம்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்த நிலையில் தற்போது இரண்டாவது பதக்கம் கிடைத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது
 
சற்று முன் பாரா ஒலிம்பிக்கில் நீளம் தாண்டுதல் போட்டியில் நடைபெற்ற நிலையில் அதில் இந்தியாவில் நிஷத்குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது வெள்ளிப்பதக்கம் என்பதால் நாடே பெருமை கொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெள்ளி வென்ற இந்திய வீரர் நிஷத்குமாருக்கு அரசியல் பிரபலங்கள் திரையுலக பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்