டோக்கியோ பாரா ஒலிம்பிக்: மாரியப்பனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (20:28 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன என்பதும் இந்த ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் உள்பட இந்தியா 7 பதக்கங்களை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதே டோக்கியோவில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது இதனை அடுத்து இந்தியாவில் இருந்து கலந்துகொள்ள இருக்கும் இந்திய வீரர்களின் அணி இன்று நோக்கிப் புறப்படுகிறது 
 
இந்திய அணியை தலைமையேற்று நடத்தி செல்பவர் நமது தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
 
டோக்கியோவில் நடக்கவிருக்கும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு இந்திய வீரர்களின் அணி பயணப்படுகிறது. அவ்வணியின் தலைவராகக் கொடியேந்திச்செல்லவிருப்பவர் நம் மாரியப்பன் தங்கவேலு. பெருமையோடு வாழ்த்திவிட்டுக் காத்திருப்போம்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்