பாரா ஒலிம்பிக் 2020 - இந்திய கொடியை ஏந்தி செல்லும் தமிழர்!

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:40 IST)
பாரா ஒலிம்பிக் 2020 இன்று துவங்க உள்ள நிலையில் தமிழக வீரர் மாரியப்பன் அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் ஒரு தங்கம் 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என இந்தியா 7 பதக்கங்களை வென்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் இன்று பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். 
 
இன்று தொடங்கும் இந்த போட்டி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும் என்பதும் 164 மூன்று நாடுகளை சேர்ந்த 4500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலிருந்து 54 பேர் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர். 
 
இதில் தமிழக வீரர் மாரியப்பன் தொடக்க விழா அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவரை தவிர வினோத்குமார் (வட்டு எறிதல்) தேக்சந்த் (ஈட்டி எறிதல்), ஜெய்தீப், சகினா (வலு தூக்குதல்) ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்