கோலி விளையாடியதில் பாதி கூட இந்த செலக்டர்ஸ் ஆடி இருக்க மாட்டார்கள்… கீர்த்தி ஆசாத் விமர்சனம்!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (17:08 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கீர்த்தி ஆசாத் கோலியிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டது குறித்து விமர்சனம் வைத்துள்ளார்.

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதும், அதன் பிசிசிஐ தந்த விளக்கமும் அந்த விளக்கத்துக்கு முரணான கோலியின் பதிலும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் கோலி அளித்த வீடியோ நேர்காணல் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோரைக் கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளதாக சொலல்ப்படுகிறது.

இந்நிலையில் கோலிக்கு ஆதரவாக 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்ற கீர்த்தி ஆசாத் பேசியுள்ளார். அதில் ‘தேர்வுக்குழுவினர் தங்கள் முடிவை தலைவர் கங்குலியிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும். அவர் சம்மதம் தெரிவித்த பின்னர்தான் வெளி உலகுக்கு அறிவிக்கவேண்டும். அவராவது கோலியிடம் பேசியிருக்கலாம். தேர்வுக்குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் பெரிய ஆட்கள்தான். ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து விளையாடிய போட்டிகளை சேர்த்தால் கூட கோலி விளையாடியதில் பாதி இருக்காது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்