ஜனவரியில் ஒமிக்ரான் அலை?

சனி, 18 டிசம்பர் 2021 (12:02 IST)
ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஜனவரியில் ஒமிக்ரான் அலை தாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
 
குறிப்பாக இந்தியாவிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 100 க்கும் மேலாக அதிகரித்து 111 என்றாகியுள்ளது. இந்நிலையில் ஜனவரியில் ஒமிக்ரான் அலை தாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
 
மேலும் ஒமிக்ரான், டெல்டா வைரசுடன் ஒப்பிடும் போது 70 மடங்கு வேகத்தில் பரவக் கூடும். இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்