எங்களுக்கு ஓய்வு தேவை… ஜாஸ்பிரீத் பும்ரா வெளிப்படை பதில்!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (11:31 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா 6 மாதமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

உலகக்கோப்பையில் கிட்டத்தட்ட இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோய்விட்டது. நேற்றைய நியுசிலாந்து போட்டியிலும் மிக மோசமாக விளையாடி இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. போட்டிக்குப் பின் காணொலி வாயிலாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பூம்ரா.

அப்போது ‘எங்களுக்கு சிறிது ஓய்வு தேவை. கடந்த 6 மாதமாக தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். பயோபபுளில் இருக்கிறோம். குடும்பத்தை பிரிந்து இருக்கிறோம். நன்றாக விளையாடவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும், களத்தில் செயல்படுத்த முடியவில்லை. பிசிசிஐ எங்களை நன்றாக வைத்திருக்கவே செய்கிறது. ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்