அண்ணாத்த வியாபாரத்தில் ஏற்பட்ட சறுக்கல்! இதுதான் காரணமா?

திங்கள், 1 நவம்பர் 2021 (10:37 IST)
ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் இன்னும் 3 நாட்களில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொந்தமாக தாங்களே சில பல கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து படத்தை வெளியிடுகிறது.

கிட்டத்தட்ட 180 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த படத்தின் வியாபாரம் 190 கோடி ரூபாய்க்குள்தான் இதுவரை வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையில் உருவாக்கப்பட்ட படத்தின் லாபம் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய்க்குள்தானா என்ற ஆச்சர்யம் எழுந்துள்ளது.

படம் ஆரம்பித்த போது இந்த படத்துக்காக கணக்கிடப்பட்ட வியாபார மதிப்பு அதிகமாக இருந்ததாம். ஆனால் கொரோனா காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால் வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ரஜினியின் கடைசி படமான தர்பார் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்ததால் மற்ற மாநிலங்களில் வழக்கமாக ரஜினி படத்துக்கு போகும் விலையை விட கம்மியான தொகையே அண்ணாத்த படத்துக்கு வியாபாரம் நடந்துள்ளதாம்.

ஆனால் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை சன் தொலைக்காட்சியே வைத்திருப்பதால் அவர்களுக்கு கூடுதல் வருவாய் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்