ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னைக்கு மீண்டும் ஒரு தோல்வி!

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (21:43 IST)
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்றைய போட்டியில் சென்னை அணியும் கோவா அணியும் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் சென்னை அணி கோவா அணியிடம் தோல்வி அடைந்தது. சென்னை அணி மூன்று கோல்களும் கோவா அணி நான்கு கோல்களும் போட்டதை அடுத்து கோவா அணி ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து சென்னை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி இரண்டே இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் டிராவில் 4 தோல்விகளையும் சென்னை அணி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று சென்னை அணியை வீழ்த்திய கோவா அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றியும், மூன்றில் டிராவும், ஒரே ஒரு தோல்வி மட்டும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல் ஐந்து இடங்களில் கோவா, ஏடிகே, பெங்களூரு, ஜாம்ஷெட்பூர் மற்றும் மும்பை ஆகிய அணிகள் உள்ளது என்பதும் பத்தாவது மற்றும் கடைசி இடத்தில் ஹைதராபாத் அணி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்