குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பைக் ரேஸில் அதிக இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஒரே நேரத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட 158 பேர் பிடிபட்டதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்