113 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா.. இந்தியாவுக்கு எளிய இலக்கு..!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (11:22 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி முதலில் 262 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து ஒரு ரன் அதிகம் எடுத்திருந்த ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி தொடங்கிய நிலையில் ஜடேஜா மற்றும் அஸ்வின்  அபார பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி113 ரன்களுக்குள் சுருண்டது. 
 
ஜடேஜா மிக அபாரமாக பந்துவீசி 7 விக்கட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் மூன்று கட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தற்போது இந்தியா அணி விளையாடி வருகிறது 
 
இன்றைக்குள் இந்திய அணி தனது இலக்கை ந்சு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்