500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

vinoth

வியாழன், 22 மே 2025 (10:19 IST)
இந்த சீசன் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என ராஜஸ்தான் அணி 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். சில வாரங்களுக்கு முன்னர் நடந்த  நடந்த ஐபிஎல் போட்டி இந்த சீசனின் மறக்க முடியாதப் போட்டியாக ரசிகர்களுக்கு அமைந்தது.

சில வாரங்களுக்கு முன்பாக  குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து உலகக் கிரிக்கெட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அவரது இந்த இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லுக்குப் பிறகு குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.

ஒருநாள் ஆச்சர்யமாக இல்லாமல் அதன் பின்பான போட்டிகளிலும் அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னை மொய்க்கும் நபர்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் சதமடித்த போட்டிக்குப் பிறகு எனக்கு 500 மிஸ்ட் கால்கள் வந்தன. நிறைய பேர் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் நான் என்னுடைய போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டேன். நான் விலகி இருக்க விரும்புகிறேன்.அதனால் நான்கு நாட்கள் எனது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்