உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி

சனி, 18 பிப்ரவரி 2023 (22:35 IST)
பெண்கள் உலகக் கோப்பை டி-20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டில், பெண்கள் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

கடைசிப் போட்டியில்  இந்திய பந்து வீச்சாளர் தீபக் சர்மாவின் சுழலில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் குரூப் பி ல் இடம்பெற்றுள்ள, இந்திய அணி  இங்கிலாந்துடன் மோதுகிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  இங்கிலாந்தஅணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு 152 ரன் கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

ALSO READ: உலகக் கோப்பை டி-20 : இந்திய அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கு!
 
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷபாலி 8 ரன்னிலும், ஜெமிமா 13 ரன்களும், ஹர்மன்பிரீத் 4 ரன்களும், மந்தனா 52 ரன் களும் அடித்தனர்.

எனவே  20 ஓவர்கள் முடியில் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இத்தொடரில் இங்கிலாந்து 3 வது வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்