உலகக்கோப்பை கிரிக்கெட்: 134 ரன்களில் சுருண்டது இந்திய மகளிர் அணி!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (09:25 IST)
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இத்னால்  இந்திய மகளிர் அணி களத்தில் இறங்கியது. இந்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மந்தனா ஓரளவு நிலைத்து ஆடினாலும் அதன்பின் அவருக்கு இணையாக யாரும் விளையாடாததால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே வந்தன
 
கோஷ் மற்றும் கோஸ்வாமி மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடி ரன்களை குவித்தனர் இந்த நிலையில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சில் இந்திய அணி 134 ரன்களுக்கு சுருண்டு உள்ளது 
 
இன்னும் சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி 135 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்