டி 20 உலகக்கோப்பையில் டி வில்லியர்ஸ் ; கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி !!

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (08:51 IST)
மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க சூப்பர் ஸ்டார் ஏ பி டிவில்லியர்ஸ் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு திரும்ப உள்ளார்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஏ பி டிவில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அந்நாட்டு வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவர் விலகினார் என சொல்லப்பட்டது.

ஆனால் 2019 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட அவர் முயற்சி செய்தார். ஆனால் அதற்கு வாரியம் சம்மதிக்கவில்லை. உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா மிக மோசமாக தோற்றது. அதன் பின் ஆம்லா போன்ற வீரர்களின் ஓய்வு அந்த அணியை மேலும் தொய்வடய வைத்தது. கிரீம் ஸ்மித் மற்றும் மார்க் பவுச்சர் ஆகியோர் வாரியத்தில் புதிதாகப் பொறுப்புகளை ஏற்றனர்.

அவர்கள் இப்போது டிவில்லியர்ஸை அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு நடக்கும் டி 20 உலகக்கோப்பை போட்டியில் அவர் விளையாடுவார் என தெரிகிறது. டி 20 போட்டிகள் மட்டுமில்லாமல் அவர் மீண்டும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக உள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்