வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

vinoth

வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (10:21 IST)
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பரிதாபகரமான நிலையில் இருக்கும் அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். அந்த அணியை விட பரிதாபகரமான நிலையில் இருக்கிறார் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதுவரை நடந்த எல்லா போட்டிகளிலும் இம்பேக்ட் ப்ளேயராக மட்டுமே களமிறக்கப்படும் அவர் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

எல்லா போட்டிகளிலும் வருவதும் இரண்டு சிக்ஸர்கள் அடிப்பதும் பவர்ப்ளே ஓவர்களுக்குள் வெளியேறுவதுமாக இருக்கிறார். நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் இதுதான் நடந்தது. 16 பந்துகளில் 26 ரன்கள் அடித்து வெளியேறினார். இதில் மூன்று சிக்ஸர்கள் அடக்கம்.

இந்த மூன்று சிக்ஸர்கள் மூலம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளில் மட்டும் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கைரன் பொல்லார்ட் 85 சிக்ஸர்களோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்