தென் ஆப்பிரிக்க அணியின் சாம்பியன் பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் இரு ஆண்டுகளுக்கு முன் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முழுக்குப்போட்டார். அந்நாட்டு வாரியத்துக்கும் அவருக்கும் இடையே எழுந்த பிரச்சனைகளே இதற்குக் காரணம். ஆனால் அதன் பின் இந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாட அவர் ஆர்வம் காட்டினார். ஆனால் வாரியம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தென் ஆப்பிரிக்க அணியும் லீக் போட்டியிலேயே வெளியேறியது.