கிரிக்கெட் மீது எங்களுக்கு இருக்கு கரிசனம் மற்றவர்களுக்கு இல்லை… பாபர் ஆசம் குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (17:10 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் கிரிகெட் நலன் குறித்து தங்களை தவிர மற்ற நாடுகளுக்குக் கரிசனம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாட எந்த வொரு அணியும் முன்வருவதில்லை. 10 ஆண்டு காலமாக துபாயில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் நடந்து வருகின்றன. இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்ற போது அவர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம்.

இந்நிலையில் இப்போது நிலைமை மெல்ல மெல்ல மாறி சில நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி நியுசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் சென்றது. ஆனால் தொடர் தொடங்க இருந்த கடைசி நேரத்தில் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு காரணமாக தொடரை ரத்து செய்துவிட்டது. இதையடுத்து இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் செல்வது குறித்து தயக்கம் காட்டி வருகிறது.

இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் ‘ மறுபடியும் ஏமாற்றம். கிரிக்கெட்டின் நலனைக் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம். மற்ற நாடுகளுக்கு கிரிக்கெட் மேல் கரிசனம் இல்லை. பல இடையூறுகளைக் கடந்து நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் மீண்டு வருவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்