புளூடூத் பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர் கைது: புதுக்கோட்டையில் பரபரப்பு..!

Webdunia
ஞாயிறு, 28 மே 2023 (10:57 IST)
புதுக்கோட்டையில் புளூடூத் பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை 666 பேர் எழுதினர். இந்த நிலையில் அறந்தாங்கி அருகே குளத்துறை சார்ந்த தர்மர் என்ற 20 வயது இளைஞர் பட்டன் கேமரா மற்றும் ப்ளூடூத் பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியது தெரிய வந்தது 
 
இதனை அடுத்து அவரை தேர்வு  எழுத தடை விதித்த அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் தர்மரை விசாரணை செய்தபோது அவருக்கு ஈரோட்டில் இருந்து பரணிதரன் என்பவர் உதவி செய்தது தெரிய வந்தது 
 
இதனை அடுத்து தர்மரை போலீசார் கைது செய்த நிலையில் பரணிதரணையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்