உலக புற்றுநோய் தினம் - டிஜிட்டல் இன்போகிராபி இணையவழி புத்தகம் வெளியீடு!

Webdunia
புதன், 31 மே 2023 (14:35 IST)
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்தியாவிலேயே முதன்முதலாக, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல் அடங்கிய டிஜிட்டல் இன்போகிராபி இணையவழி புத்தகத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிடடார்.
 
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பாக ஆண்டுதோறும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வருகின்றது, இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இன்று உலக புற்றுநோய் எதிர்ப்பு தினமான இன்று இந்திய நாட்டிலேயே முதன்முறையாக புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் இன்ஃபோகிராபிக் இணையவழி புத்தகத்தை வெளியிட்டது.
 
இதனை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெளியிட்டார், இதனை தொடர்ந்து  கோவை மாநகர காவல் ஆணையர், பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவையில்,  புதிதாக தொடங்கப்பட்ட சுந்தராபுரம் காவல் நிலையத்தில் 471-கிலோ புகையிலை பொருட்கள் பிடிக்கபட்டுள்ளது, கூல்லிப் எனப்படும் போதை பொருள் இது குறிப்பாக பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்கப்படுகிறது, இது கேரளாவிலிருந்து கொண்டு வரபட்டுள்ளது. 
 
குறிப்பாக வட மாநிலங்களில் அதிகளவில் புகையிலை பயன்பாடுள்ளது. தமிழகத்தில் அதிகளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டு 170 கடைகள் மாநகராட்சியுடன் இனைந்து மூடியுள்ளது. ஒரு கடையை மூடினால் வேறோரு பகுதியில் மீண்டும் ஒரு கடை தொடங்கப்படுகிறது. அதற்கு காரணம் அதிகளவில் முதலீடும் அதிகளவு லாபமும் தான், மருத்துவர்கள் மட்டுமல்லாது அனைவரும் இனைந்து இந்த புகையிலை எதிர்த்து போராட வேண்டும்.
 
என்று முற்றிலுமாக புகையிலை ஒழிக்கபடுகிறதோ அப்போது தான் நாம் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிப்போம். புகையிலை பழக்கத்திலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களை மாற்று வழியில் கொண்டு வர விளையாட்டு மற்றும் விளையாட்டு பயிற்சி சிறந்த ஒரு வழியாக இருக்கும் என்றார் இந்த நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன், எஸ்என்ஆர் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் என பலரும் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்