ஊருக்குள் புகுந்து தெருவில் இருந்த மக்களை தாக்கிய கொம்பன் யானை!

சனி, 27 மே 2023 (11:09 IST)
தேனி மாவட்டம் கம்பம் கூலத்தேவர் தெருவில் ஒருவரை அரிசி கொம்பன் யானை தாக்கியுள்ளது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைக்காக அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  நலமுடன் இருக்கிறார்.
 
இந்நிலையில் அரிக்கொம்பன் ஊருக்குள் வந்து ஆட்டோ உடைத்து சேதப்படுத்தியும், மக்களை துரத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இடுக்கி: கேரளாவில் உள்ள சின்னகனாலில் இருந்து தொல்லை தருவதாகவும், ஆபத்தானது என்றும் கூறி அழைத்துச் செல்லப்பட்ட அரிக்கொம்பன் என்ற யானை, தற்போது அண்டை மாநிலமான தமிழகத்தில் நாசம் செய்து வருகிறது. பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன் ஏற்கனவே வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தை அழித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்