பூரண மதுவிலக்கு வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

சனி, 27 மே 2023 (12:41 IST)
அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் திருவள்ளுவர் சிலை அருகே புதிய தமிழகம் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
குறிப்பாக டாஸ்மாக் மூலமாக ஒரு லட்சம் கோடி ஊழல் செய்வதை நிறுத்த வேண்டும், 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும்,தமிழக மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், தமிழக முழுவதும் பூரணம் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்