அமைதியாக வலம் வரும் மு.க அழகிரி யாருக்கு ஆதரவு ?

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (14:56 IST)
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திருவிழா இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வரும் மே 23 ஆம் தேதி இந்திய நாட்டின் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார். பல கட்டங்களாக நடைபெறுகின்ற தேர்தலில் மக்கள் உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி  38 மக்களைவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக  இருந்த போது  முக அழகிரி அக்கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். கலைஞரின் மரணத்திற்குப் பிறகும் ஸ்டாலின் முக அழகிரியை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
இந்நிலையில் நேற்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.
அப்போது தேர்தலில் நீங்கள் யாருக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நான் யாரையும் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார். 
 
தற்போது தன் ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவாரா? இல்லை மற்ற கட்சியில் ஐக்கியம் ஆவாரா ? என்று வெகு சீக்கிரத்தில் அழகிரி  ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்