கல்லூரி எப்போது திறக்கப்படும்..???

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (12:08 IST)
வரும் 16 ஆம் தேதி கல்லூரிகள் திறப்பது குறித்து வரும் 12 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல். 
 
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் 7 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் இந்த  முடிவிற்கு பல்வேறு எதிர்ப்புகளும் வந்துள்ளது.
 
இதனிடயே வரும் 16 ஆம் தேதி கல்லூரிகள் திறப்பது குறித்து வரும் 12 ஆம் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் எம்மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்