பிரம்மோஸ் ஏவுகணை வாங்க போட்டி போடும் உலக நாடுகள்.. சீனா அதிர்ச்சி.

Siva

செவ்வாய், 13 மே 2025 (19:20 IST)
பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” என்ற நடவடிக்கையில் பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்கு வகித்தது. இது பாகிஸ்தான் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு ஒரு வலுவான எச்சரிக்கையாக இருந்தது.
 
இந்த ஏவுகணையை இந்தியா மற்றும் ரஷ்யா சேர்ந்து உருவாக்கியுள்ளது. இது நிலம், வானம் மற்றும் கடலிலிருந்து நோக்கி பாயக்கூடியது. ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக பறக்கும் இந்த ஏவுகணை, குறைவான தவறுடன், இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
 
முதல் சோதனை 2001 ஆம் ஆண்டு நடந்தது. அதன் பின் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, இது 800 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடியதுடன், வெடிபொருட்களும் ஏற்றக்கூடியது. இது 10 மீட்டர் உயரத்திலிருந்து பறந்து இலக்கை உளுந்தப்படுத்த முடியும்.
 
பிரம்மோஸின் செயல்திறனை பார்த்து உலக நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.
 
பிலிப்பைன்ஸ் ஏற்கனவே $375 மில்லியன் ஒப்பந்தத்தில் மூன்று அமைப்புகளை வாங்கியுள்ளது. இந்தோனேஷியா, வியட்நாம், மலேசியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தாய்லாந்து, சிங்கப்பூர், புரூனே ஆகிய நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. மேலும், மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்கா நாடுகளும் வாங்க முயற்சி செய்கின்றன.
 
இன்றைய தேச பாதுகாப்பில், பிரம்மோஸ் இந்தியாவின் பெருமையாகவும், உலகம் முழுக்க விருப்பம் கொண்ட ஆயுதமாகவும் மாறியுள்ளது. இதனால் சீனாவின் ஆயுத வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் அந்நாடு அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்