சிறுவனைக் கடத்தி கொலை…ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால் மாட்டிக் கொண்ட கொலையாளி!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (12:02 IST)
உத்தர பிரதேசத்தில் சிறுவனைக் கடத்திக் கொலை செய்த நபர் தனது படிப்பறிவு இன்மையால் மாட்டிக்கொண்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் சிங் என்பவர் தனது தூரத்து உறவினர் சிறுவன் ஒருவனைக் கடத்தியுள்ளான். இது சம்மந்தமாக சிறுவனின் பெற்றோரிடம் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். ஆனால் அவர்களால் பணம் புரட்ட முடியாததால் போலிஸில் புகார் கொடுத்துள்ளனர். பணம் கிடைக்காத ஆத்திரத்தில் சிறுவனைக் கொலை செய்துள்ளான்.

இந்நிலையில் போலீஸார் சிறுவனின் பெற்றோருக்கு அவன் அனுப்பிய மெஸேஜ்களை பார்த்துள்ளனர். அதில் பல இடங்களில் அவன் ஸ்பெல்லிங்  மிஸ்டேக்கோடு அனுப்பி இருந்துள்ளான்.இதையடுத்து சிறுவன் கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகத்துக்கு இடமாக இருந்த 10 நபர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். அதில் ராம்பிரசாத்தும் இருந்துள்ளார்.

அவர்கள் அனைவரையும் போலிஸார் மெஸேஜில் தவறாக இருந்த வார்த்தைகளை எழுத சொல்லி சொல்லியுள்ளனர். அப்போது ராம்பிரசாத் மெஸேஜில் எப்படி தவறாக எழுதினானோ அதே போலவே எழுதியுள்ளான். அதையடுத்து அவன்தான் கொலையாளி என்பது உறுதியான நிலையில் போலீஸார் அவனை விசாரிக்க உண்மையை ஒத்துக்கொண்டான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்