பள்ளிகள் திறப்பு விவகாரம்: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

புதன், 4 நவம்பர் 2020 (18:13 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன என்பது தெரிந்ததே. இதனை அடுத்து சமீபத்தில் நவம்பர் 10 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பதை தமிழக அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், ஜனவரி மாதத்திற்கு பின்னர் பள்ளிகள் திறந்து கொள்ளலாம் என்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நவம்பர் 9ம் தேதி நடைபெறும் இந்த கருத்துகேட்பு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் கூறும் கருத்தை பொறுத்தே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது
 
நவம்பர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 9ம் தேதி கருத்துக்கேட்பு நடத்தப்படும் என அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்