மாலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.750 உயர்ந்து ரூ.70,840 ஆகவும், ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.8,885 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு முன்னதாக, இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.70,120 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.8,765 ஆகவும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அதே நேரத்தில் இன்று வெள்ளி விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. காலை நேரத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.109, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,09,000 என விற்பனையானது. மாலை நிலவரத்தில் விலை மாற்றமின்றி தொடர்கிறது.