தமிழகத்தின் சார்பில் கலந்து கொள்ள இருந்த ஊர்தி நிறுத்தம் காரணம் என்ன? கே.அண்ணாமலை விளக்கம்

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (23:22 IST)
குடியரசுத்தின விழாவில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொள்ள இருந்த ஊர்தி நிறுத்தம் காரணம் என்ன ? முழு விளக்கம் அளித்த பாஜக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை கரூரில் பேட்டி அளித்துள்ளார்.
 
கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில், கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்த அக்கட்சியின்  மாநிலத்தலைவர் அண்ணாமலை, பின்னர் கட்சியின் அலுவலகத்தினையும், ஊடகப்பிரிவு மையத்தினையும் திறந்து வைத்தார். தன்னிடம் மனு கொடுக்க வந்தவர்களை வைத்தே கட்சி அலுவலகத்தினை திறந்து வைத்த பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் இந்தியாவில் இருந்து பங்கேற்கும், டெல்லி  செங்கோட்டையில் பங்கேற்கும் நிகழ்ச்சி ஊர்திகளில் தமிழக ஊர்தி புறக்கணிப்பு என்று திராவிட முன்னேற்ற கழகம் விஷம பிரச்சாரம் செய்து வருவதாகவும், இந்த ஊர்தி டாப்ளோ என்கின்ற வாகனம் குறித்து விஷம பிரச்சாரம், என்பது முற்றிலும் தவறு, நமது இந்தியா வின் குடியரசுத்தின விழாவில் மத்திய உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் எந்த மாநிலத்திலிருந்து வாகனங்கள் பங்கேற்க வேண்டுமென்று நிர்ணயிக்கும், இந்த வருடம் தேவையான டாப்ளோ என்கின்ற ஊர்திகள் பங்கேற்க விரும்புகின்றீர்களா ? என்று அந்தந்த மாநிலத்தில் உள்ள தலைமை செயலாளர்களுக்கு Ministery of defence கடிதம் எழுதியுள்ளது. அது போல, இந்த வருடத்திற்கான தலைப்பு 75 வருடம் கழித்து நமது இந்தியா சுதந்திரத்திற்கு பின்பு கொண்டாடும், குடியரசுத்தின விழாவில் தான் முடிவு செய்யும், தமிழக அரசில் இருந்து பங்கேற்று, மொத்தமாக 10 ஸ்டேஜ் பிராசஸ் ஆகி பின்பு தான் ஊர்திகள் பங்கு பெறும், இந்தியன் ஆக்ட் 75 என்கின்ற வகையில் டேப்ளோ பங்கேற்கும், இந்த வகையில் 2005 ம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீர் தொடர்ச்சியாக பங்கேற்று வரும் நிலையில், வேறு எந்த மாநிலத்திலிருந்தும் பங்கேற்க வில்லை, இந்த ஊர்திகளில் இருந்து 15 மாநிலங்களில் இருந்து மட்டுமே பங்கேற்கும், ஆனால் நம் தமிழகத்திலிருந்து நமது பாரதப்பிரதமர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இந்த டாப்ளோ ஊர்தி பங்கேற்றது என்றார். நமது தமிழகத்திலிருந்து சென்ற டாப்ளோ 2019 ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை மையமாக கொண்டு பங்கேற்றது. 2020 ம் ஆண்டு நமது கிராமத்தில் உள்ள ஐயனார் சுவாமியை கொண்டு பங்கேற்றது. 2021 ம் ஆண்டு மாமல்லபுரம் சிற்பக்கலைகளை கொண்டு பங்கேற்றது. ஆகவே, மத்திய அரசு, தமிழக அரசினை புறக்கணித்தது என்றும் விஷம பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூறினார். ஆகவே, முற்றிலும் தவறான விஷயத்தினை பரப்பி வரும் நிலையில், வீரமங்கை வேலுநாச்சி அவர்களின் பிறந்த நாளை நமது பிரதமர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சிவகங்கை சீமையில் சென்று தமிழக பாஜக சார்பில் விழாவும் எடுத்துள்ளோம், சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினத்தினை பாஜக தமிழகம் முழுவதும் கொண்டாடி உள்ளோம், அதே போல, வ.ஊ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரின் பிறந்த நாளை பாரதிய ஜனதா கட்சி கொண்டாடியுள்ளது. ஆகவே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் டாப்ளோ அதிக அளவில் பங்கேற்க வில்லை, ஒருமுறை தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் 7 முறை டாப்ளோ பங்கேற்றுள்ளதையும் எடுத்து கூறினார். அதே போல கருத்து சுதந்திரம் நமக்கு முக்கியம் தான், அதே நேரத்தில் சிறுமி, சிறுவர்களை கொண்டு, நமது பிரதமரை கொச்சைப்படுத்தும் விதமாக, 2011 ம் ஆண்டில் குழந்தைகளை பாதுகாக்க மத்திய அரசு அமைத்துள்ள அங்கீகாரம் போட்டு அமைக்கப்பட்டுள்ள அமைப்பு அப்போதே, போட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மத்திய சட்டத்திருத்தத்திற்கு எதிராக Z தொலைக்காட்சியில் ஒளிபரப்பி உள்ளது. ஒருவாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், நிச்சயமாக, கேட்க தவறினால் இன்பர்மேஷன் பிராட்காஸ்ட்டிங் அமைப்பிற்கு எதிராகவும் அமைந்துள்ளது. ஆகவே சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார். இதே போல், அதிமுக விலிருந்து பாஜக கட்சிக்கு வருபவர்கள், அதிமுக தலைமை பிடிக்கவில்லை என்பதற்காக இல்லை, அதிமுக கட்சியில் இருப்பவர்களை திமுக ஆட்சியில் திமுக பிரமுகர்கள் கொடுக்கும் டார்ச்சர்களே காரணம் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், குடும்ப ரேஷன் கார்டுகளுக்கு, கொடுக்கப்பட்ட 21 வகை பொங்கல் கிப்ட் பொருட்கள் மட்டும் போதும், பாஜக கட்சியும், கூட்டணி கட்சியும் நிச்சயம் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் அதிகளவில் இடம் பிடிக்கும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்