தமிழகத்தில் ஐ.சி.யு. நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்கு: ஆக்சிஜன் பற்றாக்குறையா?

செவ்வாய், 18 ஜனவரி 2022 (20:27 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பெருகி வருகிறது என்பதும் இதனால் ஆக்சிஜன் தேவை மற்றும் ஐசியூ தேவை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன 
 
அதேபோல் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் எண்ணிக்கையும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக இதே ரீதியில் சென்றால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் எத்தனை நோயாளிகள் அட்மிட் ஆனாலும் அனைவருக்கும் ஆக்சிஜன் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்