31ஆம் தேதி ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும்?

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (06:06 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதியில் இருந்து ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் 31ஆம் தேதி அறிவிக்கவுள்ளார்

ரஜினியின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்களை விட அரசியல் கட்சி தலைவர்கள் தான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கனவே தினகரன் என்ற ஒரே ஒரு நபர் ஆர்.கே.நகரில் திராவிட கட்சிகளை மண்ணை கவ்வச்செய்ததால் இனி திராவிட அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்று தெரிகிறது

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் முக்கிய அரசியல் கட்சிகளின் நிலைமை இன்னும் மோசமாகும் என்றே அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் வரும் 31ஆம் தேதி 'ரஜினி பேரவை' என்ற அமைப்பை ரஜினி தொடங்குவார் என்றும் இந்த பேரவை தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட்டு தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கப்படும் என்றும் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இந்த பேரவை அரசியல் கட்சியாக மாறும்' என்றும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால்  ரஜினி மனதில் என்ன இருக்கிறது என்பது அவருக்கு மட்டும்தானே தெரியும்!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்