ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

Prasanth Karthick

செவ்வாய், 7 ஜனவரி 2025 (17:12 IST)

ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் போட்டியிடுவது குறித்து அதிமுக கூடி விவாதித்து முடிவு செய்ய உள்ளது.

 

 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக காங்கிரஸ் திருமகன் ஈவேரா இருந்து வந்த நிலையில் அவர் உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திருமகன் ஈவேராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் கடந்த மாதம் அவர் உடல்நலக்குறைவால் காலமானார்.

 

இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வியும் உள்ளது. கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. இதனால் இந்த முறை போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய வரும் 11ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. கூட்டத்தினர் விவாதத்திற்கு பிறகே அதிமுக தேர்தலில் போட்டியிடுகிறதா? புறக்கணிக்கிறதா? என தெரிய வரும்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்