அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Prasanth Karthick

செவ்வாய், 7 ஜனவரி 2025 (15:51 IST)

இந்தியாவில் HMPV தொற்று பரவ தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார்.

 

 

சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் சில குழந்தைகளுக்கு இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்றுக்கு அறிகுறியாக சளி, இருமல், காய்ச்சல், உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் உள்ள நிலையில் பொதுவான மருந்துகளே எடுக்கப்படுகின்றன. 

 

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் முகக்கவசம் அணியுமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதனால் முகக்கவசம் அணிவது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு விளக்கம் அளித்துள்ளார்.

 

அதில் அவர் “எச் எம் பி வி தொற்று மட்டுமல்லாமல், பொதுவாகவே காய்ச்சல் காலங்களில் நீலகிரி மாவட்ட மக்களும், சுற்றுலா பயணிகளும் முகக்கவசம் அணிவது நல்லது” என கூறியுள்ளார். தற்போதைக்கு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும், தொற்று அதிகரிக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்