டெல்லியில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்றும் அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்ட நிலையில், சற்றுமுன் தேர்தல் ஆணையம் டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.
அத்துடன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, டெல்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணிக்கை செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.