கமல்ஹாசனின் மெளனம் ஏன்?

வெள்ளி, 29 டிசம்பர் 2017 (04:02 IST)
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக டுவிட்டர் அரசியல் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென அமைதியாகிவிட்டார். அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்திக்கு வாழ்த்து கூறிய டுவிட்டரோடு நிற்கிறது. அதன் பின்னர் விஷால் வேட்புமனு பிரச்சனை, தினகரன் வெற்றி, ஓகி புயல் உள்பட பல பிரச்சனைகளுக்கு அவர் குரல் கொடுக்கவில்லை

இந்த நிலையில் அவருடைய மெளனத்திற்கு காரணம் 'விஸ்வரூபம் 2' படத்தின் பிசி என்று கூறப்பட்டாலும், தற்போதைய அரசியல் நமக்கு சரிப்பட்டு வராது என்று அவர் எண்ணிவிட்டதாக தெரிகிறது. குறிப்பாக ஆர்.கே.நகரில் நடந்த கூத்துக்களால் இரண்டு பெரிய திராவிட கட்சிகளே சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.  ஒரு கட்சி இரண்டாம் இடத்தையும், இன்னொரு கட்சி டெபாசிட்டையும் இழந்தது கமல்ஹாசனை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டதாக தெரிகிறது.

விஷாலின் வேட்புமனுவை நிராகரிக்க உபயோகப்படுத்தப்பட்ட ஆட்சி அதிகாரம் தன் மீதும் செலுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஓட்டுக்கு பணம் வாங்கி பழக்கப்பட்டுவிட்ட பொதுமக்களுக்கு தன்னால் இரை போட முடியாது என்பதையும் புரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரஜினியின் அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்தே அவர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்