சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

Siva
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (07:18 IST)
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக உருவாகியுள்ள நிலையில், இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா அருகே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு ஏற்கனவே மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஏற்கனவே சென்னையில் உள்ள பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்