டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சென்னை வந்த அவருக்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் “எனைக்கு இப்படி ஒரு வரவேற்புக் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்று வந்தபோது இப்படி ஒரு வரவேற்புக் கிடைத்தது. கிரிக்கெட்டர் அஸ்வின் இன்னும் ஓய்வு பெறவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்தான் ஓய்வு பெற்றுள்ளார். என்னால் முடிந்தவரை சி எஸ் கே அணிக்காக விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.