ராகுல் காந்தி பிரதமராக விரும்பவில்லை: வானதி சீனிவாசன் பேச்சு

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (18:52 IST)
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என அவரது கட்சி தொண்டர்கள் விரும்பினாலும் ராகுல் காந்தி அதை விரும்பவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்று கோடிக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றும் ஆனால் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று விரும்பவில்லையே என்றும் அதுதான் பிரச்சனையாக உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
பிரதமராக மோடி தொடர்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் 22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சட்டசபையில் பாஜக நுழைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
20 ஆண்டுகளுக்கு முன்பு எந்த கட்சியின் கூட்டணியும் இன்றி போட்டியிட்டு 4 எம்எல்ஏக்கள் தமிழகத்தில் வெற்றி பெற்றோம் என்றும் தமிழகம் தற்போது மாறிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்