JIO -BP இன்று அறிமுகம் செய்த E20 பெட்ரோல்

புதன், 8 பிப்ரவரி 2023 (21:53 IST)
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருன் ரிலையன்ஸ் நிறுவன அதிபருமான முகேஷ் அம்பானி கடந்த 2020 ஆம் ஆண்டு பெரியளவில் முதலீட்டை திரட்டி தன் தொழிலை விரிவுபடுத்தினார்.
 

அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள  ரிலையன்ஸ் டெய்லி பிரஸ், ஜியோ ஆன்லைன் மார்ட் மக்களைக் கவர்ந்துள்ளதைப் போல்  ஜியோ –BP மொபைலிட்டியின் கூட்டணியில் நாட்டில்  புதிதாக ரீடையில் பெட்ரோல் விற்பனை  நிலையமும் மும்பையில் திறக்கப்பட்டது.

நாட்டில் உள்ள முன்னணி எரிபொருட் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹெச்.பி, பாரத் பெற்றோலியம் ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியயாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக ரிலையன்ஸ் பெட்ரோல் எரிபொருள் துறையில் இருந்தாலும் அது பெரியதளவில் மக்களிடையே சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,ரிலையன்ஸ் மற்றும் BP இடையேயான கூட்டணியில் இன்று ரீட்டெயில் பெட்ரோலின் ஆரம்ப வெளீயீட்டை அறிவிப்பு செய்தது.

அரசு இன்று அறிவித்தபடி, E-20  எரிபொருள் என்பது 20% எத்தனால் மற்றும் 80% புதைபடிய எரிபொருள் கலவையென்பதால் நாட்டில் உற்பத்தியாகும் முதல் எரிபொருள் கலவையிது
.
வெளி நாட்டில் இருந்து எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பது, எரிபொருள் தரம், காற்றில் குறைந்த கார்பன் உமிழ்வு அளவு,  இவற்றைக் கருத்தில்கொண்டு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு E20 எரிபொருளை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிப்பு, முதலீடு அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் எரிபொருள் இலக்கை வரும் 2025 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டிற்குள் முன்னேற்றமடையும் என்றும், இதன் மூலம் உலகில் எரிபொருள் சந்தையில் வேகமாக வளரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியா முழுவதிலும்  ஜியோ-BP மொபைலிட்டி நிலையங்கள் நாட்டில் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும்,வாடிக்கையாளர்களின் வசதியை  நிறைவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: எத்தனால் தயாரிக்க 126 மையங்கள் அமைக்கப்படும் - மத்திய அரசு தகவல்

மேலும், வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் சுமார் 5,500 ஜியோ –Bp(பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பிரபல எண்ணெய் நிறுவனம்)திறக்க வேண்டுமென்பது நிறுவனத்தின் இலக்கு என Bp-ன் சி இ ஓ பெர்னாட் லூயி கூறியிருந்தார்.

இன்று பாராளுமன்றக் கூட்டத் தொடரில், ''கெட்டுப் போன தானியங்கள், சர்க்கரை அதிகமுள்ள கிழங்கு வகைகள், உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இருந்தும்  மனிதர்களால் பயன்படுத்த முடியாத பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்க  மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், நாடு முழுவதும் எத்தனால் தயாரிக்க 126 மையங்கள் அமைக்கப்படும் எனவும், 337 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்க தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது'' குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்