நாடு முழுவதும் பந்த்... சென்னையில் தொழிற்சங்க தலைவர்கள் கைது !

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (14:40 IST)
நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும்  தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 
எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களைத் தவிர இதர மாநிலங்களில் இந்த போராடத்திற்கு ஆதரவு இல்லை என தெரிகிறது.
 
ஆனால், மேற்கு வங்கம் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
சென்னையில் இந்த  வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றாலும் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை, வழக்கம் போலவே பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்கின.
 
மேலும்,சென்னையில் போராட்டம் நடத்திய தொழிற்சங்க  தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்