24 மணி நேரத்தில் ஐசியூவில் இருந்து குணமாகிய ஜே.என்.யூ மாணவர்: என்ன நடக்குது?

செவ்வாய், 7 ஜனவரி 2020 (09:43 IST)
குடியுரிமை சீர் திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜே.என்.யூ பல்கலை மாணவர்கள் கடந்த சில வாரங்களாக தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத சிலர் முகமூடி அணிந்து திடீரென பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்களை அடித்து துவம்சம் செய்ததாக கூறப்பட்டது
 
இதனை அடுத்து ஜே.என்.யூ கம்யூனிஸ்ட் மாணவர்கள் சங்கமான எஸ்எப்ஐ சங்க தலைவர் சூரி என்பவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் டெல்லி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டது
 
ஆனால் திடீரென 24 மணி நேரத்தில் அவர் காயங்கள் எதுவும் இன்றி முற்றிலும் குணமாகி சொந்த ஊரான கேரளாவிற்கு வந்த அதிசய சம்பவம் நடந்துள்ளதாக பாஜக பிரமுகர்கள் தங்கள் டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்து வருகின்றனர் 
 
காயமடைந்த ஒரு ஜே.என்.யூ மாணவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் எப்படி 24 மணி நேரத்தில் கேரளாவில் வந்து இறங்கினார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும் என்றும், 24 மணி நேரத்தில் குணமான அதிசயத்தை அவர் கூறினால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்றும் பாஜக பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு தையல் போடப்பட்டிருந்த இடங்களில் முற்றிலும் அகற்றப்பட்டு, தையல் போட்ட அறிகுறியே இல்லாமல் இருக்கும் அதிசயம் எப்படி நடந்தது என்பதை கூற வேண்டுமென பாஜக பிரமுகர்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்