போய் வரவா... இன்றோடு விடை பெறும் பருவமழை!!

புதன், 8 ஜனவரி 2020 (12:16 IST)
இன்றுடன் பருவமழை முடிவுக்கு வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்கிறது. தென்மேற்கு பருவமழையால் குறைந்த அளவு மழையை பெறும் தமிழகக் கடலோர பகுதிகள், வடகிழக்கு பருவமழையால் அதிக அளவிற்கு நேரடி மழையை பெறுகிறது.
 
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் இன்றுடன் பருவமழை முடிவுக்கு வருகிறது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இண்டஹ் பருவமழை தமிழகத்திற்கு பாதகம் விளைவிக்கவில்லை. 
 
அக்டோபர் மாதத்தில் நல்ல மழையுடன் துவங்கிய பருவமழை, நவம்பரில் குறைந்தாலும் டிசம்பரில் நன்கு பொழிந்தது. அத்ன் பின்னர் இப்போது ஜனவரியிலும் ஒரு சில நாட்களில் மழை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்