புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருவதை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்லும் அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் பிறகு ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
பிரதமர் வருகையை ஒட்டி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்பன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள் மற்றும் நாட்டு படகுகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.